Sep 26, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் விமான நிலையத்தில் அத்துமீறி நடந்து கொண்ட சீனப் பிரஜை கைது
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் விமான நிலையத்தில் அத்துமீறி நடந்து கொண்ட சீனப் பிரஜை கைது

Share:

சிப்பாங், மே.17-

கோலாலம்பூர் விமான நிலையத்தின் முனையம் ஒன்றிலுள்ள, சர்வதேச புறப்பாட்டுப் பகுதியில், பாதுகாப்புப் கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 1.35 மணியளவில் நடந்ததாக கேஎல்ஐஏ போலீஸ் தலைவர் ரவி முனுசாமி தெரிவித்துள்ளார்.

சீனப் பிரஜையான அப்பெண், விமான டிக்கெட் இல்லாமல் தானியங்கி பாதுகாப்புச் சோதனை மையத்தைக் கடந்துச் சென்றதாகவும், பின்னர் கேட் C பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் அணுகிய போது ஆவேசமாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

இச்சம்பவத்தையடுத்து, நேற்று பிற்பகல் சுமார் 1.45 மணியளவில் அப்பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News