Jul 18, 2026
Thisaigal NewsYouTube
கைதிகள் மீதான தாக்குதல்: தைப்பிங் சிறைக்காவலர்கள் 5 பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது
தற்போதைய செய்திகள்

கைதிகள் மீதான தாக்குதல்: தைப்பிங் சிறைக்காவலர்கள் 5 பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது

Share:

கடந்த ஆண்டு தைப்பிங் சிறைக்கலவரத்தின் போது, மூன்று கைதிகளைத் தாக்கியதாக ஐந்து சிறைக்காவலர்கள் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி, தைப்பிங் சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள், சிறைக்காவலர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஒரு கைதி மரணமடைந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, மனித உரிமை ஆணையமான சுஹாகம் நடத்திய பொது விசாரணைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து, ஐந்து சிறைக்காவலர்கள் நாளை காலை 9 மணிக்கு, தைப்பிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் மீது குற்றவியல் சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்படவுள்ளதாகப் கூட்டரசு குற்றப்புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.

Related News