May 28, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்
தற்போதைய செய்திகள்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

Share:

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி அலுவலகம், பொதுமக்களிடையே இதய ஆரோக்கியம் மற்றும் முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் “சேவ் தி ஹார்ட் 7.0” எனும் சமூக நலத் திட்டத்தை கடந்த மே 23, 24 ஆகிய தேதிகளில் நடத்தியது.

கோத்தா கெமுனிங், ஷேக் கிளினிக்கில் நடைபெற்ற இந்த இருநாள் நிகழ்வு, ஆரோக்கியமான வாழ்க்கையே சமூகத்தின் உற்பத்தித் திறனுக்கும் மகிழ்ச்சிக்கும் அடிப்படை என்பதை மையமாகக் கொண்டு அமைந்தது.

நிகழ்விற்கு தலைமையேற்ற கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பி. பிரகாஷ் சம்புநாதன் கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களின் அன்றாடப் பணிகளில் மூழ்கி, உடல் ஆரோக்கியத்தை மறந்துவிடுகிறார்கள் என்று குறிப்பிட்டார். ஆரோக்கியப் பராமரிப்பு என்பது நோய் வந்த பிறகு செய்வதல்ல, மாறாக அது ஒரு தொடர் பழக்கமாக மாற வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.

மலேசியர்களிடையே அதிகரித்து வரும் இதய நோய் போன்ற தீவிர பாதிப்புகளைக் குறைக்க, சீரான உணவுமுறை, முறையான உடற்பயிற்சி மற்றும் முன்கூட்டிய மருத்துவப் பரிசோதனைகள் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். இத்திட்டம், மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் தங்களின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News