அனைத்துலக சட்ட நிறுவனங்களின் வலையமைப்பான மல்டிலாவின் (Multilaw) தலைவராக மலேசிய வழக்கறிஞர் ஜோயன் வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

100க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் இந்த வலையமைப்பின் தலைமைப் பொறுப்பை அவர் வரும் 2027-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஏற்கவுள்ளார்.
இங்கிலாந்தில் 25 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றும் இவர், லண்டனில் உள்ள பென்னிங்டன்ஸ் மன்சேஸ் கூப்பர் (Penningtons Manches Cooper) சட்ட நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் மற்றும் தரவு தொடர்பான சட்ட விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.
கடந்த 1997ஆம் ஆண்டு மலேசியாவில் தனது சட்டத்துறைப் பயணத்தைத் தொடங்கிய ஜோயன் வெங்கடேசன், இங்கிலாந்தில் பணியாற்றினாலும் மலேசியாவுடனான தொடர்பைத் தொடர்ந்து பேணி வருகிறார். இவர் முன்னாள் மலேசியத் தூதர் ஆர். வெங்கடேசின் மகள் ஆவார்.








