Oct 23, 2026
Thisaigal NewsYouTube

1எம்டிபி நிதி மீட்பு நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
1எம்டிபி நிதி மீட்பு நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதி

1எம்டிபி நிதி முறைகேடு தொடர்பாகத் தண்டனை பெற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டாலும், அரசாங்கம் சிவில் வழக்குகள் மற்றும் சொத்துகளை மீட்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் எனப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் வழக்குகளுக்கும் சிவில் வழக்குகளுக்கும் இடையே சட்ட அடிப்படைகளும் ஆதாரங்களை நிரூபிக்க வேண்டிய விதிமுறைகளும் வேறுபடுவதாக அன்வார் நாடாளுமன்றத்தில் தமது எழுத்துப்பூர்வப் பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக 1எம்டிபி நிதி மீட்பு நடவடிக்கைகள், குற்றவாளிகளின் தண்டனைக் காலத்தில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப்படாது என்பதற்கான உறுதியைக் கோரி, பக்காத்தான் ஹராப்பானின் ஈப்போ திமோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாவர்ட் லீ எழுப்பிய கேள்விக்குப் அன்வார் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மேலும், நீதிமன்றங்களின் அதிகாரத்தையும் அரசியலமைப்பின் கீழ் வழங்கப்படும் மன்னிப்பு அதிகாரத்தையும் மதித்து, சட்ட வழிகளில் தேசிய நிதியை மீட்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், 1எம்டிபி தொடர்பான கடன் மற்றும் நிதிப் பொறுப்புகளுக்காக அரசாங்கம் இதுவரை 42.5 பில்லியன் ரிங்கிட் செலுத்தியுள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட 31.3 பில்லியன் ரிங்கிட் நிதி மற்றும் சொத்துகளைக் கழித்த பின்னர், அரசாங்கத்தின் நிகர நிதிச் சுமை 20.1 பில்லியன் ரிங்கிட்டாக இருப்பதாகவும் அவர் விவரித்துள்ளார்.

இதனிடையே எதிர்காலத்தில் கூடுதல் நிதி மீட்கப்படாவிட்டால் இந்தத் தொகை தொடரும் என்றும் அன்வார் விளக்கமளித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →