Oct 23, 2026
Thisaigal NewsYouTube

துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த மாட்டுப் பண்ணைத் தொழிலாளி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த மாட்டுப் பண்ணைத் தொழிலாளி

பேராக் மாநிலம் செமோர் பகுதியில், துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிப்பதற்காக ஆற்றில் குதித்த 56 வயதான மாட்டுப் பண்ணைத் தொழிலாளி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில், தனது பண்ணைக்கு அருகிலுள்ள வெளிப்புறக் கழிப்பறைக்குச் சென்ற போது மோட்டார் சைக்கிள் சத்தத்தைக் கேட்டதாக அந்நபர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, தனது காரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கருதிய அவர், அங்கிருந்து தப்பியோடி அருகிலிருந்த ஆற்றில் குதித்து உதவி கேட்டு அலறியுள்ளார்.

அதன் பின்னர், திங்கட்கிழமை அதிகாலை செமோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →