நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மலேசியர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், வங்கிகள் கடன் தவணைகளை ஒத்தி வைத்துள்ளன.
மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதிச் சுமையைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் தகாஃபுல் நிறுவனங்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. சில கட்டணங்களைத் தள்ளுபடி செய்தல், காப்புறுதிக் கோரிக்கைகளை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட உதவிகளும் பரிசீலிக்கப்படுகின்றன.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வங்கிகளை நேரடியாகத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் 54 மலேசியர்கள் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








