Oct 22, 2026
Thisaigal NewsYouTube

அதிகார துஷ்பிரயோகத்தை மறைக்க வேண்டாம்; தைரியமாகப் புகார் அளியுங்கள்! – எஸ்பிஆர்எம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அதிகார துஷ்பிரயோகத்தை மறைக்க வேண்டாம்; தைரியமாகப் புகார் அளியுங்கள்! – எஸ்பிஆர்எம்

மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி ஊழியர்கள், அதிகார துஷ்பிரயோகம் அல்லது சட்டத்துக்கு முரணான உத்தரவுகள் குறித்து அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் தைரியமாகப் புகார் அளிக்க வேண்டும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹாலிம் அமான் வலியுறுத்தியுள்ளார்.

சைபர்ஜெயாவில் உள்ள எம்சிஎம்சி அரங்கில் இன்று நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான ஒருமைப்பாடு மற்றும் தணிக்கை மாத நிறைவு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தவறான செயல்களைப் பாதுகாக்காமல் புகார் அளிப்பதன் மூலம் நிறுவனத்தின் நேர்மையையும் பொறுப்புடைமையையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றார். அதிகாரம் என்பது விருப்பம்போல் பயன்படுத்துவதற்கான சலுகையல்ல; அதை வெளிப்படையாகவும் பொறுப்புடனும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, எம்சிஎம்சி ஆணைய உறுப்பினரும் தணிக்கை மற்றும் இடர் குழுத் தலைவருமான பேராசிரியர் டாக்டர் முஹமட் சல்மி முஹமட் சோஹோட், ஊழலை ஒழிப்பதிலும் பொறுப்புடனான நிர்வாகத்தைத் தொடர்ந்து உறுதிப்படுத்துவதிலும் தமது அமைப்பு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →