Oct 22, 2026
Thisaigal NewsYouTube

ஜெட்ரிக்ஸ் ஏஐ நிறுவனம் இடைநீக்கம்! ஜேபிஜே சேவைகள் பாதிக்கப்படவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜெட்ரிக்ஸ் ஏஐ நிறுவனம் இடைநீக்கம்! ஜேபிஜே சேவைகள் பாதிக்கப்படவில்லை

ஜெட்ரிக்ஸ் ஏஐ பெர்ஹாட் நிறுவனத்தின் வசூல் முகவர் சேவை இடைநிறுத்தப்பட்டாலும், சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜேவின் சேவைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும், அபராதம் செலுத்துதல், சாலை வரி மற்றும் வாகன உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை மைஜேபிஜே செயலி மூலம் பொதுமக்கள் வழக்கம்போல் பெறலாம் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, அரசாங்க வருவாயான 230.9 மில்லியன் ரிங்கிட்டைச் செலுத்தத் தவறியதாக மைஇஜி செண்டிரியான் பெர்ஹாட் மற்றும் ஜெட்ரிக்ஸ் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் போலீஸ் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றன. மேலும், ஜேபிஜே துறைக்கு இரு நிறுவனங்களும் 314 மில்லியன் ரிங்கிட் நிலுவை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஜெட்ரிக்ஸ் ஏஐ நிறுவனம் இடைநீக்கம்! ஜேபிஜே சேவைகள் பாதிக்க... | Thisaigal News