ஜோகூர் பாருவில் போலி மைகார்டு மற்றும் பிறருடைய மைகார்டு நகல்களை அடையாள ஆவணங்களாகப் பயன்படுத்திய 43 பேருக்கு மூன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் தலா ஆயிரம் முதல் 9,000 ரிங்கிட் வரை அபராதம் விதித்தன.
18 முதல் 49 வயதுக்குட்பட்ட அவர்களில் மூவர் மலேசியர்கள்; மற்றவர்கள் இந்தோனேசியர்கள் மற்றும் 37 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஒன்று முதல் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரண்டு தொழிற்சாலைகளில் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தக் குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களில் 35 பேர் பிறருடைய மைகார்டு நகல்களையும், எட்டு பேர் போலி மைகார்டுகளையும் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
வெளிநாட்டினர் வேலை பெறுவதற்காகப் பிறருடைய அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தும் நடவடிக்கையை தேசியப் பதிவுத் துறை நடத்திய சோதனைகளில் கண்டறிந்ததாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.








