Oct 22, 2026
Thisaigal NewsYouTube

சக்கர நாற்காலியில் உள்ளவரின் பிணை ரத்து! போதைப்பொருள் வழக்கில் மீண்டும் சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சக்கர நாற்காலியில் உள்ளவரின் பிணை ரத்து! போதைப்பொருள் வழக்கில் மீண்டும் சிறை

பக்கவாதத்தால் இடுப்புக்குக் கீழே செயலிழந்து சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் 44 வயது எம். அழகேசன் என்பவருக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய பிணையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனால் அவர் மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நீதிபதிகள் சூ கா சிங், கே. முனியாண்டி, லதிஃபா தஹார் ஆகியோர் அடங்கிய மூவர் அமர்வு, ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் இத்தகைய குற்றங்களுக்கு பிணை வழங்கத் தடை இருப்பதால், உயர் நீதிமன்றத்தின் முடிவு தவறானது எனத் தீர்ப்பளித்தது. அவருக்கு வழங்கப்பட்ட 1.5 லட்சம் ரிங்கிட் பிணைப் பணத்தை குடும்பத்தினரிடம் திருப்பிக் கொடுக்கவும் உத்தரவிட்டது.

2024 பிப்ரவரி 7ஆம் தேதி, உலு சிலாங்கூர், கம்போங் கே.எல் டின் பகுதியில் 6.2 கிலோகிராம் கஞ்சாவைக் கடத்தியதாக அழகேசன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், விசாரணையை விரைவுபடுத்தி இந்த ஆண்டுக்குள் முடிக்க முயற்சிக்குமாறும், அதுவரை சுங்கை பூலோ சிறை மருத்துவப் பிரிவில் அவரை வைத்திருக்கவும் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →