Oct 22, 2026
Thisaigal NewsYouTube

டெலிகிராம் மூலம் பாலியல் தொழில்; ஆண்டுக்கு 54 லட்சம் ரிங்கிட் வருமானம் ஈட்டிய கும்பல் முறியடிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டெலிகிராம் மூலம் பாலியல் தொழில்; ஆண்டுக்கு 54 லட்சம் ரிங்கிட் வருமானம் ஈட்டிய கும்பல் முறியடிப்பு

டெலிகிராம் செயலி மூலம் பாலியல் சேவைகளை விளம்பரப்படுத்தி, ஆண்டுக்கு 54 லட்சம் ரிங்கிட் வரை வருமானம் ஈட்டிய கும்பலைப் போலீசார் முறியடித்துள்ளனர். சிறார்கள் உள்ளிட்டோரைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்திய இந்தக் கும்பல், தினமும் சுமார் 100 வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை வழங்கியுள்ளது.

‘கேங் யுனா’ எனப்படும் இக்கும்பல், 2024ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சிலாங்கூர், கோலாலம்பூரில் செயல்பட்டு வந்ததாகவும், அதன் 30 வயது தலைவன் உட்பட 18 முதல் 44 வயதுக்குட்பட்ட ஏழு பேரைக் கைது செய்துள்ளதாகவும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார். ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் 150 ரிங்கிட் பெற்ற இக்கும்பல், தினமும் சுமார் 15,000 ரிங்கிட் ஈட்டியதாகக் கூறப்படுகிறது.

செப்டம்பர் 24 முதல் 26 வரை நடத்தப்பட்ட நடவடிக்கையில், 14 கைப்பேசிகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் அக்டோபர் 23ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட உள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →