Oct 22, 2026
Thisaigal NewsYouTube

புகைமூட்டம்: சிலாங்கூர், மலாக்கா, பகாங் பள்ளிகள் நாளை வழக்கம்போல் இயங்கும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புகைமூட்டம்: சிலாங்கூர், மலாக்கா, பகாங் பள்ளிகள் நாளை வழக்கம்போல் இயங்கும்

சிலாங்கூர், மலாக்கா, பகாங் மாநிலங்களில் உள்ள பள்ளிகள் நாளை வழக்கம்போல் இயங்கும். எனினும், புகைமூட்டம் காரணமாக வகுப்பறைக்கு வெளியே நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மாநிலக் கல்வித் துறைகள் அறிவித்துள்ளன.

சிலாங்கூரில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் முகக்கவசம் அணிய ஊக்குவிக்கப்படுகின்றனர். பள்ளி நிர்வாகங்கள் காற்றுத் தரக் குறியீட்டைக் கண்காணிப்பதுடன், அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய மாணவர்களின் உடல்நலத்திலும் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மலாக்காவில், பிள்ளைகளின் உடல்நலம் குறித்து கவலைப்படும் பெற்றோர் பள்ளிக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கலாம். பகாங் மாநிலம் பெந்தோங் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளிலும் வெளிப்புற நடவடிக்கைகள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →