Oct 22, 2026
Thisaigal NewsYouTube

அறிவுசார் சொத்துகளைக் கடன் பெறுவதற்கான சொத்தாக அங்கீகரிக்க மலேசியா வலியுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அறிவுசார் சொத்துகளைக் கடன் பெறுவதற்கான சொத்தாக அங்கீகரிக்க மலேசியா வலியுறுத்தல்

அறிவுசார் சொத்துகளை வங்கிக் கடன் பெறுவதற்கான சொத்தாக அங்கீகரிக்கவும், செயற்கை நுண்ணறிவை ஆக்கப்பூர்வப் பணிகளில் பொறுப்புடன் பயன்படுத்தத் தெளிவான வழிகாட்டுதல்களை உருவாக்கவும் மலேசியா வலியுறுத்தியுள்ளது.

இந்தோனேசியா, ஜாகர்த்தாவில் நடைபெற்ற ஐந்தாவது உலகப் படைப்பாற்றல் பொருளாதார மாநாட்டின் அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல், படைப்பாற்றல் திறன்களுடன் டிஜிட்டல் திறன்களையும் மேம்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மலேசியாவின் கலாசார, படைப்பாற்றல் தொழில்கள் 2024ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 விழுக்காட்டுப் பங்களித்ததுடன், 6300 கோடி ரிங்கிட் ஏற்றுமதி வருவாயையும் ஈட்டி, 7.6 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →