Oct 22, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளி பஜார்: கடை வாடகை 400 ரிங்கிட்டாகக் குறைப்பு! – ஹன்னா இயோ

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளி பஜார்: கடை வாடகை 400 ரிங்கிட்டாகக் குறைப்பு! – ஹன்னா இயோ

தீபாவளியை முன்னிட்டு இந்திய வர்த்தகர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல், தீபாவளி பஜாருக்கான கடை வாடகையைக் குறைத்துள்ளதாக கூட்டரசுப் பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹான்னா இயோ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பஜார் நடைபெறும் காலமும் 21 நாள்களிலிருந்து 30 நாள்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்காக டிபிகேஎல், 18 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மேடை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மூலம் பொதுமக்களை ஈர்த்து, இந்திய வர்த்தகர்களின் விற்பனையை அதிகரிப்பதே நோக்கம் என்றார். ஒரு கடைக்கான வாடகை 400 ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டுள்ளதால், இந்தியச் சமூகம் பஜாருக்கு வருகை தந்து வர்த்தகர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று மதியம் கோலாலம்பூர் மாநகரில் தமிழ் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற நல்லெண்ண விருந்து உபசரிப்புடனான சந்திப்பில் ஹன்னா இயோ, இதனைத் தெரிவித்தார். பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், நிருபர்கள் கலந்து கொண்ட இந்த நல்லெண்ண சந்திப்பில் பேசிய அமைச்சர் ஹன்னா இயோ, , தீபாவளி பண்டிகையின் பெயர் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் வ ‘Deepavali’ என்பதே அதிகாரப்பூர்வமான பயன்பாடு என்றும், பல இன, பல மத மக்கள் வாழும் மலேசியாவில் பண்டிகைகள் ஒற்றுமையையும் பரஸ்பர புரிதலையும் வளர்க்கும் வாய்ப்பாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தமிழ் ஊடகவியலாளர்களுடன் நட்புறவுடன் நடைபெற்ற தீபாவளி நல்லெண்ண சந்திப்பில் அமைச்சர் ஹன்னா இயோவுடன், கூட்டரசு பிரதேச நில மற்றும் கனிம வள இயக்குநர் டத்தின் படுகா ரஹிலா ரஹ்மாட், புத்ராஜெயா கழகமயத்தின் தலைவர் டத்தோ ஹாஜி முஹமட் சகேரி அப்துல் காடிர் மற்றும் கூட்டரசு பிரதேச அமைச்சின் முக்கிய அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →