டிக் டோக் ஸ்ஷோப் தடை - அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை
மலேசியாவில் டிக் டோக் ஸ்ஷோப் எனும் டிக்டோக் செயலி வாயிலாக விற்பனை முறையை தடை செய்வது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவவெடுக்க வில்லை என தொடர்பு, மின்னிலக்க அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
அவ்விவகாரம் இன்னும் 2 ஆம் கட்ட ஆய்வில் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
நாளை இவ்விவகாரம் குறித்து அந்த சமூக ஊடகத்தாரை தமது துணை அமைச்சர் சந்திக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இந்தோனேசியாவில் டிக் டோக் ஸ்ஷோப் தடை செய்யப்பட இருப்பதை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








