கோலாலம்பூர், ஆகஸ்ட்.05-
தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஃஎப் சந்தாதாரர்கள் மத்தியில் மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவது மீதான ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாக இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்தார்.
அந்தத் திட்டத்தை மேலும் ஆக்கப்பூர்வமாக அமல்படுத்துவது குறித்து மிக விரிவான முறையில் ஆராயப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இபிஃஎப் வாரியத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்திற்கு அரசாங்கம் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமீர் ஹம்ஸா, மாதம் தோறும் பென்சன் தொகை கிடைப்பதைப் போல இபிஃஎப் சந்தாதாரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்க இத்திட்டம் வகை செய்யும் என்று அவர் விளக்கினார்.








