தொழிலாளர் தினமான நேற்று கோலாலம்பூர் மாநகரில் இரண்டு வெவ்வேறு இடங்களில் மக்களின் எழுச்சி எனும் பெயரில் இரண்டு ஊர்வலங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு தொடர்பாக போலீசார் இரண்டு விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளனர்.
மாநகரின் மையப்பகுதியில் மாஜு ஜங்சன் கட்டடத்திலிருந்து தொடங்கி, ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் வாயிலாக லெபோ அம்பாங் வரையில் ஓர் ஊர்வலமும், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் சோகோ பேரங்காடியின் முன்புறமும் ஓர் உர்வலமும் நடத்தப்பட்டது தொடர்பில் இந்த விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி. நோர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார்.
மாஜூ ஜங்சன் ஊர்வலத்தில் சுமார் 200 பேர் பங்கு கொண்டுள்ள வேளையில் சோகோ பேரங்காடி முன்புறம் நடந்த ஊர்வலத்தில் சுமார் 30 பேர் பங்கு கொண்டுள்ளதாக நூர் டெல்ஹான் குறிப்பிட்டார். இந்த இரண்டு ஊர்வலங்களையும் ஏற்பாடு செய்தவர்கள், விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

Related News

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்


