Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கைவிடப்பட்ட அடுக்குமாடிகள் தொழிலாளர் குடியிருப்பாக மாறும்
தற்போதைய செய்திகள்

கைவிடப்பட்ட அடுக்குமாடிகள் தொழிலாளர் குடியிருப்பாக மாறும்

Share:

பினாங்கு மாநிலத்தில் கைவிடப்பட்ட அடுக்கங்கள் மற்றும் நடுத்தர அடுக்கு மாடி வீடுகள் தொழிலாளர்களுக்கான தங்கு விடுதிகளாக மாற்றப்படும் என்று பினாங்கு மாநில வீடமைப்பு,சுற்றுச்​சூழல் ஆட்சிக்கு உறுப்பினர் டத்தோஸ்ரீ எஸ். சுந்தரராஜு தெரிவித்தார்.

குறிப்பாக, செபராங் பிறையில் உள்ள விற்கப்படாத மலிவு விலை அடுக்குமாடி வீடுகள் அந்நியத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு ​வீடுகளாக மாற்றப்படும்.

செபராங் பிறை வட்டாரத்தில் உள்ள பல தொழிற்சாலை நிர்வாகங்கள் அடு​க்குமாடி வீடுகளை தங்களிடம் வேலை செய்கின்ற அந்நியத் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகளாக மாற்றி வருகின்றன. இது உண்மையிலேயே ஒரு நல்ல முயற்சி என்று சுந்தரராஜு தெரிவித்தார்.

Related News