Aug 26, 2026
Thisaigal NewsYouTube
தேசிய தின விடுமுறை: பிளஸ் நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு 22 லட்சம் வாகனங்கள்
தற்போதைய செய்திகள்

தேசிய தின விடுமுறை: பிளஸ் நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு 22 லட்சம் வாகனங்கள்

Share:

தேசிய தின கொண்டாட்டம் மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு, பிளஸ் நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு 22 லட்சம் வாகனங்கள் பயணிக்கும் என பிளஸ் மலேசியா எதிர்பார்க்கிறது.

ஆகஸ்ட் 28 முதல் 31 வரையும், செப்டம்பர் 4 முதல் 7 வரையும் போக்குவரத்து உச்சத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும்,பிளஸ் செயலியில் உள்ள மைபிளஸ்-டிடிஏ டிஜிட்டல் பயண அட்டவணையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 33 இடங்களில் ஸ்மார்ட் வழித்தடங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

டோல் சாவடிகள், ஓய்வு நிறுத்துமிடங்களில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பிளஸ் ரோண்டா ரோந்துப் பணிகளும் அதிகரிக்கப்படுகின்றன.

பயணத்திற்கு முன் வாகனங்களைச் சரிபார்த்து, டச் அன் கோ அல்லது மின்னணுப் பணப்பையில் போதிய இருப்பு உள்ளதையும் உறுதி செய்யுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News