Aug 26, 2026
Thisaigal NewsYouTube
பூஜை பாட்டில்லில் மானிய சமையல் எண்ணெய்! கடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
தற்போதைய செய்திகள்

பூஜை பாட்டில்லில் மானிய சமையல் எண்ணெய்! கடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

Share:

கெடா, பாடாங் செராய் பகுதியில் அரசாங்க மானிய சமையல் எண்ணெயை பூஜை பயன்பாட்டுக்கான சிறிய பாட்டில்களில் நிரப்பி விநியோகம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இந்திய கடை உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெடா போலீசார் நடத்திய சோதனையில், வரி செலுத்தப்படாத 207 அட்டைப்பெட்டிகள் மற்றும் 66 பாட்டில் அல்லது டின் மதுபானங்களும், 33 அட்டைப்பெட்டிகள் சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்று கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரிங்கிட் 69,186 என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கைது செய்யப்பட்ட மூன்று வெளிநாட்டு தொழிலாளர்களின் பயண அனுமதிகளும் காலாவதியானவை எனத் தெரியவந்துள்ளது.

மானிய சமையல் எண்ணெய் தொடர்பான விசாரணை, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சிடம் ஒப்படைக்கப்படும் என்று டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.

Related News