Sep 7, 2026
Thisaigal NewsYouTube
இடிக்கப்பட்ட கோவில் விவகாரம்: நீதிமன்றத்தில் சந்திக்க பெர்லிஸ் அரசு தயார்
தற்போதைய செய்திகள்

இடிக்கப்பட்ட கோவில் விவகாரம்: நீதிமன்றத்தில் சந்திக்க பெர்லிஸ் அரசு தயார்

Share:

கங்காரில் அண்மையில் இடிக்கப்பட்ட ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் தொடர்பாகத் தொடரப்பட்டுள்ள சிவில் வழக்கை எதிர்கொள்ள பெர்லிஸ் மாநில அரசு தயாராக இருப்பதாக மந்திரி பெசார் அபு பக்கார் ஹம்சா தெரிவித்துள்ளார்.

1965 தேசிய நிலச் சட்டத்தின் கீழ், அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி அமைந்திருந்ததால் கோவிலை அகற்ற மாநில அரசுக்கு உரிமை இருப்பதாக அவர் கூறினார்.

ஆனால், கோவில் நிர்வாகக் குழு ஆகஸ்ட் 19-ஆம் தேதி பெர்லிஸ் மாநில அரசு, கங்கார் நில அலுவலகம் மற்றும் நகராட்சி மன்றத்திற்கு எதிராக சிவில் வழக்கு தொடர்ந்தது. அதற்கு மறுநாளே, ஆகஸ்ட் 20-ஆம் தேதி கோவில் இடிக்கப்பட்டது.

இதனிடையே, வரும் டிசம்பர் 31 வரை கோவிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது என்று முன்னர் உறுதியளித்ததாக கோவில் நிர்வாகக் குழு தரப்பு தெரிவித்துள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து