Sep 15, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள்  வழக்குக் விசாரணை கைதியின் மனைவியுடன் முறைகேடு? அதிகாரி பணியிடைநீக்கம்
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் வழக்குக் விசாரணை கைதியின் மனைவியுடன் முறைகேடு? அதிகாரி பணியிடைநீக்கம்

Share:

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரின் மனைவியுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கிளந்தான், கோல கிராய் மாவட்ட போலீஸ் தலைமையக விசாரணை அதிகாரி தற்காலிகமாகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புகார் கிடைத்ததைத் தொடர்ந்து வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணை நடத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு முரணாகச் செயல்படும் எந்த போலீஸ் அதிகாரிக்கும் எதிராகவும் சமரசம் செய்யப்படாது என்றும் அவர் எச்சரித்தார்.

சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.

தற்போது சம்பந்தப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஐஜிபி. விளக்கினார்.

Related News