ரவாங்கிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் தாம் அரசியல்
உரையை நிகழ்த்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சிலாங்கூர்
இஸ்லாமிய சமய இலாகாவான ஜாய்ஸ், விசாரணைக்கு அழைத்தால்
அவ்விலாகாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தாம் தயாராக உள்ளதாக
தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில்
கூறினார்.
விசாரணைக்கு வரும்படி தாம் பணிக்கப்பட்டால் அதற்கு உடன்பட தாம் தயாராக இருப்பதாக ஃபஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டார். சிலாங்கூர், கம்போங் மிலாயு ஸ்ரீ குண்டாங் நுருள் யாக்கின் பள்ளிவாசலில் கடந்த
ஞாயிறு அன்று உரை நிகழ்த்திய போது அரசியல் விவகாரங்களை ஃபஹ்மி ஃபட்சில்
தொட்டதாகக் கூறும் தலைப்புடன் அவரின் புகைப் படத்தை ஊடகங்கள்
வெளியிட்டிருந்தன.
இவ்விவகாரம் தொடர்பில் ஜாய்ஸ் நேற்று முன் தினம் புகாரைப் பெற்றிருந்ததாகவும்
இது குறித்து விளக்கம் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட பள்ளிவாசலின்
பராமரிப்பாளர் அழைக்கப்பட்டதாகவும் ஊடகச் செய்திகள் கூறின.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


