மலாக்கா, ஜனவரி.04-
2026-ஆம் ஆண்டின் முதல் வாரத்திலேயே, தேசமே ஆவலுடன் எதிர்பார்க்கும் சில 'மிக முக்கிய' அறிவிப்புகளைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை வெளியிடவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அதிரடித் தகவலை உடைத்துள்ளார்! நாளை காலை அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி அவசர விவகாரங்களை விவாதிக்கவுள்ள பிரதமர், அதைத் தொடர்ந்து 11.30 மணியளவில் பொருளாதாரம், கல்வி, நிறுவன சீர்திருத்தங்கள் குறித்த அதிரடித் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவாலான பொருளாதாரச் சூழலில் சிக்கியுள்ள மக்களுக்குப் பெரும் நிம்மதி தரும் வகையிலும், நாட்டின் புதிய திசைவழியை நிர்ணயிக்கும் வகையிலும் இந்த 'புத்தாண்டு உரை' அமையப் போவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது. "நாங்கள் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறோம்" என ஜசெக-வின் மலாக்கா மாநாட்டில் அந்தோணி லோக் முழங்கியுள்ளார்.








