Sep 28, 2026
Thisaigal NewsYouTube
ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்
தற்போதைய செய்திகள்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

Share:

ஹரி ராயா பண்டிகை காலத்தில் வீட்டை காலியாக விட்டுச் செல்லும் மக்கள், அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் “பாலிக் கம்போங்” படிவத்தை நிரப்பி அல்லது Volunteer Smartphone Patrol செயலி மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்று பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பண்டிகை காலத்தில் காலியாக இருக்கும் வீடுகளை போலீசார் அடிக்கடி கண்காணித்து, கூடுதல் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

சாலை பயனாளர்களின் பாதுகாப்பும், கவனிப்பில்லாமல் விடப்படும் வீடுகள் அல்லது வளாகங்களின் பாதுகாப்பும் போலீசாரின் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பண்டிகை காலம் முழுவதும் அவை பாதுகாப்பாக இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம் என்றும் நூர் ஹிஷாம் நோர்டின் குறிப்பிட்டுள்ளார்.

Related News