Jun 29, 2026
Thisaigal NewsYouTube
தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி
தற்போதைய செய்திகள்

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

Share:

தவறு எதுவும் செய்யவில்லை என்றால் ஜம்ரி வினோத் மற்றும் தமிம் தாரி ஆகிய இருவரும் மலேசியாவிற்கு திரும்பி வர வேண்டும் என்று சட்ட சீர்திருத்தங்களுக்கான துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்துள்ளார்.

அவர்கள் உருவாக்கிய பிரச்சினைகளுக்கு நேரில் வந்து விளக்கம் அளித்து, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தவறு செய்யாதவர்கள் ஏன் சட்டநடவடிக்கைகளைக் கண்டு அஞ்ச வேண்டும் என்றும் கேள்வி எழுப்பிய குலசேகரன், அவர்கள் எதையோ மறைக்க முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜம்ரி வினோத் மற்றும் சூலத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய தமிம் தாரி ஆகிய இருவர் மீதும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இருவரும் தாய்லாந்திற்கு தப்பிச் சென்று விட்டதாக மலேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் நேற்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு