Jun 29, 2026
Thisaigal NewsYouTube
குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

Share:

குளுவாங் மாவட்டம் கம்போங் ரஹ்மத், ஸ்ரீ லாலாங், பகுதியில் புலி நடமாட்டத்தை கண்காணிக்க, வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான பெர்ஹிலிட் தான் பல முக்கிய இடங்களில் கேமரா கண்காணிப்புகளை பொருத்தியுள்ளது.

கடந்த வாரம் அப்பகுதியில் புலி ஒன்று நடமாடுவதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலையடுத்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்துள்ளார்.

குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அதே வேளையில் களத்திலுள்ள உண்மையான நிலவரத்தை அதிகாரிகள் மதிப்பிடுவதற்கும் இந்த கண்காணிப்பு முயற்சி முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புலி நடமாட்டத்தைக் காணும் பட்சத்தில், அதனை நெருங்கவோ, துரத்தவோ அல்லது காயப்படுத்தவோ கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

உனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேறி, பெர்ஹிலிட் தான் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு