கோலாலம்பூர், அக்டோபர்.06-
சுற்றுலாத்துறையைச் சேர்ந்த தனியார் தரப்பினர் நடத்திய மதுபான விருந்து உபசரிப்பு தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங்கைக் குறைகூறுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு சுற்றுலாத்துறையைச் சேர்ந்த மூன்று சங்கங்கள் இன்று கேட்டுக் கொண்டுள்ளன.
கடந்த அக்டோபர் முதல் தேதி நடைபெற்ற அந்த விருந்து உபசரிப்பில் மதுபான பயன்பாடு இருந்தது குறித்து தொடர்ந்து வியாக்கியானம் செய்ய வேண்டாம் என்றும், சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங்கைக் குறைகூற வேண்டாம் என்றும் அந்த சங்கங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளன.








