நோம் பென், ஜூலை.23-
போதைப்பொருளைக் கடத்துவதற்கு முயற்சி செய்த 6 மலேசியர்கள், கம்போடியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்போடியா தலைநகர் நோம்பெனிலிருந்து ( Phnom Penh ) பிரிட்டனுக்கு 62 கிலோ கஞ்சாவைக் கடத்துவதற்கு அவர்கள் முயற்சி செய்த போது விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டதாக கம்போாடியாவின் பிரதானப் பத்திரிகையான நோம்பென் போஸ்ட் தெரிவித்துள்ளது.
அந்த ஆறு மலேசியர்களும் நோம்பென் விமான நிலையத்தில், கம்போடியாவின் போதைப்பொருள் தடுப்புக் குழுவினரால் கைது செய்யப்பட்டதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.








