Sep 7, 2026
Thisaigal NewsYouTube
புகைமூட்ட நிலைமை: குழந்தைகளின் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைக்க மருத்துவர் நவீன் அறிவுறுத்து
தற்போதைய செய்திகள்

புகைமூட்ட நிலைமை: குழந்தைகளின் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைக்க மருத்துவர் நவீன் அறிவுறுத்து

Share:

புகைமூட்டம் காரணமாக காற்றுத் தரக் குறியீடான API 101-ஐ எட்டும் வரை காத்திருக்காமல், அதற்கு முன்பே குழந்தைகளின் வெளிப்புற நடவடிக்கைகளை குறைக்க வேண்டும் என குழந்தைகள் நல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

API 95 மற்றும் 101 இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்றும், அளவு தொடர்ந்து அதிகரித்து வந்தால் கூடுதல் முன்னெச்சரிக்கை அவசியம் என்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் ஜி நவீன் நாயர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு சுவாசப் பாதைகள் சிறியதாக இருப்பதாலும், உடல் எடையுடன் ஒப்பிடும்போது அதிக அளவு காற்றை சுவாசிப்பதாலும் புகையின் தாக்கம் அதிகமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஓடுதல், உடற்பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபடும் போது அதிக நுண்துகள்களை சுவாசிக்க நேரிடும். ஆஸ்துமா உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ள குழந்தைகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மலேசிய சுற்றுச்சூழல் துறையின் வகைப்படுத்தலின் படி, API 101 முதல் 200 வரை ‘ஆரோக்கியக் கேடு’, 201 முதல் 300 வரை ‘மிகவும் ஆரோக்கியமற்றது’, 300-க்கு மேல் ‘ஆபத்தானது’ என வகைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து