Sep 12, 2026
Thisaigal NewsYouTube
தேசிய தினக் கொண்டாட்ட ஒத்திகை: மலேசியர்களின் மனதை கவர்ந்த கே9 ஸிஆவ் பாவ்
தற்போதைய செய்திகள்

தேசிய தினக் கொண்டாட்ட ஒத்திகை: மலேசியர்களின் மனதை கவர்ந்த கே9 ஸிஆவ் பாவ்

Share:

புத்ராஜெயாவில் நாளை நடைபெறவுள்ள தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ள நிலையில், ஸிஆவ் பாவ் என்ற பாசமான கே9 பிரிவைச் சேர்ந்த நாய், மலேசியர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில், பொதுமக்கள் ஸிஆவ் பாவ் என அழைத்ததும் அவர்களிடம் சென்று பாசமாக தடவிக் கொடுக்க அனுமதிப்பதைக் காண முடிகின்றது.

மற்றொரு காணொளியில் ஸிஆவ் பாவ் முதுகில் படுத்து நான்கு கால்களையும் தூக்கி வைத்துக்கொண்டு, பொதுமக்கள் வயிற்றை தடவிக் கொடுப்பதை ரசித்த காட்சி பலரையும் கவர்ந்துள்ளது.

பொதுவாக கே9 பிரிவைச் சேர்ந்த நாய்கள் கண்டிப்பான தோற்றத்துடன் காணப்படும் நிலையில், ஸிஆவ் பாவ்வின் இந்த பாசமான செயல்கள் இணையத்தில் நகைச்சுவையான கருத்துகளையும் பெற்றுள்ளன.

முன்னதாக நேற்று, டத்தாரான் புத்ராஜெயாவில் நடைபெற்ற தேசிய தின முழு ஒத்திகையில் கிங் ஒயென் என்ற 6 வயது பூனை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

ஜாலூர் கெமிலாங் வடிவிலான சட்டை,தலைப்பாகை மற்றும் கண்ணாடி அணிந்து ஒத்திகையில் பங்கேற்ற கிங் ஒயென், தொடர்ந்து நான்காவது ஆண்டாக மெர்டெக்கா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி