நீலாய் என்9 அரேனா பகுதியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில், தனது 3 வயது மகளுடன் சென்ற 29 வயது பெண்ணின் மகளது தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டதில் 2 ஆயிரம் 900 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் கூட்ட நெரிசலுக்கிடையே நடந்ததாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஜோஹாரி யஹ்யா தெரிவித்துள்ளார்.
அச்சிறுமி தனது கழுத்தில் இருந்த சங்கிலி காணாமல் போனதாக தாயிடம் கூறியதைத் தொடர்ந்து, தாய் உடனடியாகச் சரி பார்த்த போது சங்கிலி பறிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சிறுமியிடம் சந்தேக நபர் குறித்து கேட்ட போது, அவர் ஒரு ஆண் என்று மட்டுமே கூறியுள்ளார்.
வயது குறைவாக இருப்பதால் மேலதிக அடையாளங்களை சிறுமியால் வழங்க முடியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் சட்டம் பிரிவு 392-ன் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








