Sep 15, 2026
Thisaigal NewsYouTube
தேசிய தின விழா சிறப்பாக நடைபெறும் என மாமன்னர் நம்பிக்கை
தற்போதைய செய்திகள்

தேசிய தின விழா சிறப்பாக நடைபெறும் என மாமன்னர் நம்பிக்கை

Share:

நாளை நடைபெறவுள்ள 69-வது தேசிய தினக் கொண்டாட்டங்கள் எந்தவித தடையுமின்றி சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறும் என மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இஸ்தானா புக்கிட் துங்குவில் இன்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடனான சந்திப்பிற்குப் பிறகு மாமன்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு விழாவில் பங்கேற்கும் அனைவரும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் சுல்தான் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இச்சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய நிலவரம் மற்றும் தேசிய தின விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து மாமன்னருக்குப் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.

‘Malaysia Madani: Kesejahteraan Dinikmati’ என்ற கருப்பொருளில் நாளை காலை 8 மணிக்கு டத்தாரான் புத்ராஜெயாவில் இவ்விழாவானது தொடங்குகிறது.

இதில் 76 அணிகளைச் சேர்ந்த 10,819 அணிவகுப்பு வீரர்கள் மற்றும் 22 இசைக் குழுக்கள் பங்கேற்கின்றன.

மேலும், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பேரரசியார் ராஜா ஸாரித் சோஃபியா ஆகியோருடன், பிரதமர் அன்வார் மற்றும் அமைச்சரவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்