Sep 7, 2026
Thisaigal NewsYouTube
புத்ராஜெயா தேசிய தினக் கொண்டாட்டம்: 15,000 இலவச வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு
தற்போதைய செய்திகள்

புத்ராஜெயா தேசிய தினக் கொண்டாட்டம்: 15,000 இலவச வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு

Share:

புத்ராஜெயாவில் நாளை ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறும் 69-வது தேசிய தினக் கொண்டாட்டத்தையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் சுமார் 15,000 பொது வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையமான PICC, Precinct 1, Precinct 8, Precinct 9, Precinct 18 மற்றும் Terra@8 ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வாகனங்களில் வருவோருக்கு மாற்றாக இலவச பேருந்து சேவை, எம்ார்டி மற்றும் இஆர்எல் சேவைகளையும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MS01 பேருந்து சேவையானது இன்று பிற்பகல் 2 மணி முதல் நாளை பிற்பகல் 2 மணி வரை 24 மணி நேரமும் இயக்கப்படவுள்ளது.

அதேவேளையில் MS02 பேருந்து சேவை நாளை காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “Malaysia Madani: Kesejahteraan Dinikmati” என்ற கருப்பொருளில் நடைபெறும் தேசிய தின விழாவானது நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இதில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து