Sep 15, 2026
Thisaigal NewsYouTube
காற்று மாசு அதிகரிப்பு: மேக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது மலேசியா
தற்போதைய செய்திகள்

காற்று மாசு அதிகரிப்பு: மேக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது மலேசியா

Share:

காற்று மாசுக் குறியீடு 150 API-ஐத் தாண்டிய பகுதிகளில், குறிப்பாக 200 மற்றும் அதற்கு மேல் பதிவாகும் இடங்களில் மேக விதைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.

தேசியப் பேரிடர் மேலாண்மை முகமை, மலேசிய வானிலை ஆய்வு மையம் மற்றும் மலேசிய விமானப் படை ஆகியவை இணைந்து புகைமூட்டம் பாதித்த பகுதிகளில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் மேக விதைப்பு அவசியமாகியுள்ளது என்றும், இந்த நடவடிக்கையால் மேகங்கள் இலக்கு பகுதிகளை நோக்கி நகருமா என்பதையும் கருத்தில் கொண்டே செயல்படுத்தப்படும் என்றும் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தோனிசியாவில் இருந்து பரவும் புகைமூட்டம் காரணமாக மலேசியா முழுவதும் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்