மலாக்கா, ஆகஸ்ட்.01-
ஒரு கும்பலாக ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று ஆடவர்களைச் சமய இலாகாவினர் கைது செய்தனர்.
அந்த மூவர் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகைப்படங்கள் மற்றும் காணெளிகள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து மலாக்கா மாநில சமய இலாகா 21, 24, 26 வயதுடைய ஆடவர்களை அடையாளம் கண்டதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரஹ்மாட் மரிமான் தெரிவித்தார்.
ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்ட காட்சிகளைக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அந்த மூவரும் தங்கள் கைப்பேசியில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதன் தொடர்பில் போலீசாரின் ஒத்துழைப்புடன் சமய இலாகா அதிகாரிகள், அந்த மூவரின் கைப்பேசிகளைப் பறிமுதல் செய்துள்ளதாக டத்தோ ரஹ்மாட் மரிமான் தெரிவித்தார்.








