காஜாங், ஜனவரி.03-
காஜாங்கில் நேற்று உணவகம் ஒன்றில், ஹீலியம் வாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இவ்விபத்தில் 2 கடைகளும், 3 வாகனங்களும் சேதமடைந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும், அதனால் ஏற்பட்ட மொத்த சேத அளவு குறித்தும் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
என்றாலும், இந்த சம்பவத்தில், சந்தேகத்திற்கிடமான வகையில் எந்த குற்றச் செயல்களும் இல்லை என்பதை நாஸ்ரோன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹீலியம் வாயுவானது பொதுவாக அலங்கார பலூன்களில் நிரப்பக்கூடியது ஆகும்.








