நாட்டில் கிட்டத்தட்ட பாதி பேர் அவசரகால தேவைகளுக்காக ஆயிரம் வெள்ளியைத் திரட்டுவதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக மத்தியப் பொருளகமான பேங்க் நெகாரா மலேசியாவின் கேபனர், டத்தோ அப்துல் ரஷீத் கஃபூர் தெரிவித்தார்.
மலேசியர்கள் இன்னும் நிதி நிர்வாகத்தில் குறுகியகாலப் சிந்தனையுலேயே இருப்பதாகவும், எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்வது உட்பட, தங்கள் சொந்த நிதி அபாயங்களை நிர்வகிப்பதில் குறைந்த திறன் கொண்டவர்களாகவும் இருப்பதாக அவர் கூறினார்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் விரிவான நிதித் திறன் ஆய்வில், 2015ஆம் ஆண்டு முதல், மூன்றில் ஒருவருக்கு காப்புறுதி. தகாவூல் போன்ற்வற்றைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
2015 முதல் மலேசியர்களின் நிதி நிர்வாகம் தொடர்பான அறிவு தொடர்ச்சியான முன்னேற்றத்தைக் காட்டினார்லும் மக்களின் நிதி நிர்வாகத்திற்கும் அவர்களின் நடவடிக்கைக்கும் இந்த முன்னேற்றம் போதாது என டத்தோ அப்துல் ரஷீத் கூறினார்.
அவசர தேவை ஏற்படும்போது மக்கள் அதிகமாகக் கடன் வாங்குவதாக நிதி நிர்வாக நிறுவனமான எ.பி.கே.கே புள்ளிவிவரம் காட்டுவதை அவர் சுட்டிக் காட்டினார்.
நியாயமான வருமானம் பெறுகிறவர்களில், மூன்றில் ஒருவர் கடன் பிரச்சனையால் சிக்கி இருப்பதாகவும் ஆய்வு காட்டுவதாக டத்தோ அப்துல் ரஷீத் மேலும் சொன்னார்.








