அண்மையில், பத்துமலைத் திருத்தலத்தின் வெளியே செயல்பட்டு வந்த பூக்கடைக்கள் இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற நிலையில், அதற்கு மாற்றாக வேறு பூக்கடைகளைக் கட்டித் தர கோலாம்பூர் மகா மாரியமன் திருக்கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் தான் ஶ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தெரிவித்தார்.
நீதிமன்ற தீர்ப்பின்படி, அந்த நிலம் பத்துமலை நிர்வாகத்திற்கே திரும்பத் தரப்பட வேண்டும். எனவே, எடுக்கப்பட்ட நிலத்தை, நிலமாகவே கொடுக்க செலாயாங் நகராண்மைக் கழகம் அந்தப் பூக்கடைகளை இடித்தது. கடந்த ஆகஸ்டு மாதமே அந்தக் கடை வியாபாரிகளுக்கு நோட்டீ௶ கொடுக்கப்பட்டதாகக் கூறும் தான் ஶ்ரீ நடராஜ, தீபாபளி வரை வியாபாரம் செய்யவும் அனுமதித்ததாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார்..
அங்கு செயல்பட்டு வரும் பூக்கடைகளுக்கும் தமது நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும்கூட, மாற்று கடைகள் கட்டித் தரத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, இவ்விவகாரம் தொடர்பில் தங்கள் விருப்பத்திற்கு யாரும் சமூக வலைத் தளங்களில் கருத்து தெரிவிக்கவோ அல்லது தவறானத் தகவல்களைப் பரப்பு மக்களைக் குழப்ப வேண்டாம் எனவும் தான் ஶ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.








