Jan 19, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல் குற்றச்செயல்களுக்குத் துணை போகாதீர்! போலீஸ்காரர்களுக்கு அயோக் கான் நினைவுறுத்து
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் குற்றச்செயல்களுக்குத் துணை போகாதீர்! போலீஸ்காரர்களுக்கு அயோக் கான் நினைவுறுத்து

Share:

போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் குற்றச்செயல்களுக்குத் துணை போக வேண்டாம் என்று அரச மலேசிய போலீஸ் படையின் அதிகாரிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத் தொழிப்பு பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைதீன் பிச்சை நினைவுறுத்தியுள்ளார்.

போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் அனைத்து மாநிலங்களின் போலீஸ் தலைவர்களுடன் இன்று இயங்கலை வழி நடத்திய சந்திப்பில் அரச மலேசிய போலீஸ் படையின் நம்பகத்தன்மை, நேர்மை மற்றும் கட்டொழுங்கு ஆகியவற்றை கட்டிக்காக்க வேண்டிய அவசியத்தை அயோப் கான் வலியுறுத்தினார்.

இம்மாதம் 16 ஆம் தேதி புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் மிக உயரிய பொறுப்பான குற்றப்புலனாய்வுத்துறையின் சி.ஐ.டி. இயக்குநர் பதவியையேற்கவிருக்கும் அயோப் கான், போலீஸ் படையின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவிற்கு தலைமையேற்றுள்ள மாநிலத் தலைவர்களுக்கு வழங்கிய இறுதி நல்லுரையில் போலீஸ் படையின் நம்பகத்தன்மையை வலியுறுத்தி பேசினார்.

நாட்டை செல்லரித்துக்கொண்டு இருக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் தொடர்புடைய குற்றச்செயல்களை முற்றாக துடைத் தொழிப்பதில் போலீஸ் படையினர் நேர்மையுடன் பணியாற்றி, தங்கள் கடற்பாட்டை நிரூபிக்க வேண்டும் என்று அயோப் கான் வலியுறுத்தினார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்