Jul 31, 2026
Thisaigal NewsYouTube
நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் காலமானார்
தற்போதைய செய்திகள்

நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் காலமானார்

Share:

தமிழ்த்திரையுலக நடிகரும். தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்த் இன்று டிசம்பர் 28 ஆ ம் தேதி வியாழக்கிழமை) காலையில் காலமானார். அவருக்கு வயது 71. உடல் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த விஜயகாந்த் இன்று காலையில் இறுதி மூச்சை விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சென்னை. மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்….

அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு மூச்சு விடுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் காலையில் உயிரிழந்தார்.

விஜயகாந்த் உடல் ஆம்புலன்ஸ் வண்டியின் மூலம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.. சென்னையில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். விஜயகாந்த் வீட்டின் முன்பு தொண்டர்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுதனர்..

மறைந்த நடிகர் விஜயகாந்த், தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகை கட்டியாண்ட பெருமைக்குரியவர் ஆவார். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர் என்று மக்கள் வர்ணித்துள்ளனர்.

தன்னலமற்ற தலைவரான விஜயகாந்த் தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர் என்று அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.
தமிழ் திரையுலகில் கேப்டன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த். 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஆவார். 1979 இல் வெளியான அகல் விளக்கு தமிழ்ப்படம் மூலம் நடிகர் விஜயகாந்த் தமிழ் திரையுலகில் அ றிமுகமானாார். இவரின் நூறாவது வெற்றிப்படம் கேப்டன் பிரகாரன் திரைப்படமாகும்.

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு