Jul 31, 2026
Thisaigal NewsYouTube
சீரமைப்பு மோசடிகளைத் தவிர்க்க கட்டுமான ஒப்பந்தம்
தற்போதைய செய்திகள்

சீரமைப்பு மோசடிகளைத் தவிர்க்க கட்டுமான ஒப்பந்தம்

Share:

சீரமைப்பு மோசடிகளுக்குப் பலியாகுவதை தவிர்ப்பதற்கு வீட்டு உரிமையாளர்கள் தங்களை கற்பித்துக் கொள்ளவும் கட்டுமான ஒப்பந்தத்துடன் பழக்கப்படுத்திக் கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரிய (சிடிஐபி) -யின் தலைவரான டத்தோ முகமட் ஜைட் ஜகாரியா கூறுகையில், வீட்டு உரிமையாளர்கள் மாதிரி கட்டுமான ஒப்பந்தத்தை சிடிஐபி இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சீரமைப்பு திட்டத்தில் ஈடுபடுகின்ற அனைத்து தரப்பினரின் பொறுப்புகள் மற்றும் ஒப்பந்தக் கடமைகளை எளிதாக அறிந்து கொள்வதற்கு இந்த மாதிரி கட்டுமான ஒப்பந்தம் உதவும் என்றார் டத்தோ முகமட் ஜைட்.

இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டால் சீரமைப்பு மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்றார் அவர்.

Related News