புத்ராஜெயா, அக்டோபர்.08-
மலேசியாவில் மக்களிடையே வறிய நிலை, கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் வறிய நிலை தற்போது 0.09 விழுக்காட்டில் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மக்களின் வருமானத்தை உயர்த்துதல், நகர்ப்புற சமூகவியல் பொருளாதாரத்தை பலப்படுத்துதல், மக்களுக்கான நல்வாழ்வை மேம்படுத்ததல் உட்பட அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல்வேறு முன்முயற்சிக்கான தொடர் நடவடிக்கைகள் ஆக்ககரமான பலாபலனைத் தந்துள்ளது என்பதற்கு இந்த புள்ளி விவரம் சான்றாகும் என்று அமீர் ஹம்ஸா குறிப்பிட்டார்.








