Dec 2, 2025
Thisaigal NewsYouTube
யூ.பி.எஸ்.ஆர். மற்றும் பி.டி.3. தேர்வுகள் மறுபடியும் கொண்டு வரப்படாது
தற்போதைய செய்திகள்

யூ.பி.எஸ்.ஆர். மற்றும் பி.டி.3. தேர்வுகள் மறுபடியும் கொண்டு வரப்படாது

Share:

கல்வி அமைச்சு திட்டவட்டம்

தொடக்கப்பள்ளிகளில் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான யூ.பி.எஸ்.ஆர். தேர்வு மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் மூன்றாம் படிவ மாணவர்களுக்கான பி.டி.3. தேர்வு ஆகியவற்றைக் கல்வி அமைச்சு மீண்டும் நடைமுறைப்படுத்தாது என்று இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பள்ளியை அடிப்படையாக கொண்ட மதிப்பீட்டான பி.பி.எஸ். மற்றும் வகுப்பறையை அடிப்படையாககொண்ட மதிப்பீடான பி.பி.டி ஆகிய தேர்வு முறைகளை அமல்படுத்துவதன் மூலமாக மாணவர்களின் அடைவு நிலையை மதிப்பீடு செய்யும் ஒரு முழுமையான கல்வி மேம்பாட்டுத்திட்ட அணுகுமுறையில் கல்வி அமைச்சு தற்போது கவனம் செலுத்தி வருவதாக துணை கல்வி அமைச்சர் லிம் ஹூய் யிங் தெரிவித்தார்.

பி.பி.எஸ். மற்றும் பி.பி.டிஆகிய மதிப்பீடுகள் ஒட்டுமொத்தமாகவும், நீடித்த காலத்திற்கும் மாணவர்களின் திறன்களை வளப்படுத்துவதற்கும், மேம்படுத்துதற்கும் உரிய வழிகளையும், வாய்ப்புகளையும் வழங்குகின்றன என்று பக்காத்தான் ஹராப்பானின் ராசா உறுப்பினர் ஷா கீ சின் கேள்விக்குப் பதில் அளிக்கையில் துணை அமைச்சர் லிம் ஹூய் யிங் இதனை தெரிவித்தார்.

யூ.பி.எஸ்.ஆர். தேர்வு கடந்த 2021 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட வேளையில் பி.டி.3. கடந்த ஆண்டு அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News