Oct 15, 2026
Thisaigal NewsYouTube

மேலும் 14 நாட்கள் வரை ஆகலாம் என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மேலும் 14 நாட்கள் வரை ஆகலாம் என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது

ஜன.5-

ஷா ஆலாமில் உள்ள சட்டத்திற்குப் புறம்பானக் குப்பைக் கிடங்கில் ஏற்பட்டத் தீயை அணைக்க மேலும் 14 நாட்கள் வரை ஆகலாம் என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. குப்பை மலையின் சரிவில் மண் சரிவு ஏற்பட்டதால், அணைக்கும் பணி தாமதமாகிறது. கனரக இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாததாலும், சரிவுகளில் படிக்கட்டுகள் அமைக்க வேண்டியிருப்பதாலும் இந்த தாமதம் ஏற்படுவதாக சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு – மீட்புப் படையின் ஷா ஆலாம் பிரிவின் தலைவர் Ahmad Zaidi Safuan கூறினார்.

குப்பைக் கிடங்கில் கட்டுமானப் பொருட்கள், பிளாஸ்டிக், காகிதக் கழிவுகள் கலந்துள்ளன. மண் சரிவால் ஏற்பட்ட வெடிப்புகளின் மூலம் வெளியேறும் புகை, உள்ளே தீயின் ஆதாரம் இருப்பதைக் காட்டுகிறது. நேரடி நீர் தாக்குதல் தீயின் மூலத்தை அடையாது என்பதால், தோண்டி எடுக்க கனரக இயந்திரங்கள் தேவைப்படுகின்றன என்றார்.

மூன்று படிக்கட்டுகள் அமைத்து, பின்னர் நேரடி நீர் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிலப்பரப்பு, வானிலை, காற்றின் திசை போன்ற காரணிகளும் அணைக்கும் பணியைப் பாதிக்கின்றன. எனவே, தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் வரை 24 மணி நேரமும் அணைக்கும் பணி தொடரும் என்று Ahmad Zaidi மேலும் சொன்னார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்