Sep 23, 2026
Thisaigal NewsYouTube
கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

Share:

ஈப்போ மற்றும் தாப்பா ஆகிய பகுதிகளில் பேராக் போலீசார் நடத்திய அதிரடிச் சோதனைகளில், கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த தம்பதியர் உட்பட ஏழு பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. 22 முதல் 44 வயதுக்குட்பட்ட ஐந்து உள்ளூர் ஆண்களும் இரண்டு பெண்களும் இந்தச் சோதனையின்போது பிடிபட்டனர் என்று பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது அல்வி ஜைனல் ஆபிதீன் தெரிவித்துள்ளார்

இதில் சுமார் அரை மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ, எக்ஸ்டசி கெட்டமின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றுடன் மூன்று கார்கள் மற்றும் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், ஒட்டுமொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மதிப்பு 7 லட்சத்து 94 ஆயிரத்து 827 ரிங்கிட்டாகும் என்று டத்தோ முகமது அல்வி ஜைனல் ஆபிதீன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் முதல் தீவிரமாக இயங்கி வந்த இக்கும்பலால் சுமார் 23 ஆயிரத்து 332 போதைப் பித்தர்கள் சீரழிக்கப்படும் அபாயம் தடுக்கப்பட்டுள்ளது. பிடிபட்டவர்களில் இருவருக்கு போதைப்பொருள் சோதனை 'பாசிட்டிவ்' என வந்துள்ள நிலையில், இவர்களில் ஆறு பேருக்கு முந்தைய குற்றப் பின்னணிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று டத்தோ முகமது அல்வி ஜைனல் குறிப்பிட்டார்

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீ... | Thisaigal News