Sep 23, 2026
Thisaigal NewsYouTube
கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்
தற்போதைய செய்திகள்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

Share:

மலேசியாவை உணவு உற்பத்தி மற்றும் புதுமைக்கான பிராந்திய மையமாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மொண்டலீஸ் அனைத்துலக நிறுவனம் தனது புதிய ‘கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்’ சாக்லேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

தென்கிழக்காசியாவிலேயே முதன்முறையாக இந்த இரு பெரும் பிராண்டுகளின் கூட்டாண்மை தயாரிப்பு மலேசியாவில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சாக்லேட் முழுவதும் சிலாங்கூர், ஷா ஆலமில் உள்ள கேட்பரி தொழிற்சாலையிலேயே தயாரிக்கப்படுகிறது. இது உலகத் தரத்திலான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் மலேசியாவிற்கு இருக்கும் சிறந்த திறனை மீண்டும் உலகிற்கு உறுதிப்படுத்தியுள்ளது.

கேட்பரி டெய்ரி மில்க் சாக்லேட்டின் மென்மையான சுவையும், லோட்டஸ் பிஸ்காஃப் கேரமல் பிஸ்கட்டின் மொறுமொறுப்பும் இணைந்த இத்தயாரிப்பு, ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசிய பயனீட்டாளர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தயாரிப்பு, தற்போது நாடு முழுவதும் உள்ள முக்கிய பல்பொருள் அங்காடிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட கன்வினியன்ஸ் ஸ்டோர் மற்றும் கேட்பரி டெய்ரி மில்க் மலேசியாவின் அதிகாரப்பூர்வ டிக் டாக் கடை ஆகியவற்றின் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்