Sep 23, 2026
Thisaigal NewsYouTube
ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்
தற்போதைய செய்திகள்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

Share:

சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோவின்'லிண்டுங் 24 ஜாம்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிதியுதவி விண்ணப்பங்களின் எண்ணிக்கை, கடந்த ஜூலை மாதத்தில் மும்மடங்கிற்கும் மேலாக கணிசமாக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் 616 ஆக இருந்த விண்ணப்பங்கள், ஜூலையில் 2,135 வழக்குகளாக அதிகரித்துள்ளதாக பெர்கேசோ இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 1 முதல் 31 வரையிலான காலகட்டத்தில், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானவை வெறும் ஐந்து நாட்களுக்குள் அங்கீகரிக்கப்பட்டு, மொத்தம் 2,508 பயனாளிகளுக்கு 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் பெரும்பாலான பகுதி, அதாவது 2.5 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி, விபத்துக்குள்ளான சந்தாதாரர்களின் மருத்துவச் செலவுகள் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உபகரணங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக ஊனமுற்றோருக்கான வருமான இழப்பீடாக எட்டு லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 1 முதல் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 4.69 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. வேலை நேரத்தைத் தாண்டி, 24 மணி நேரமும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டம் தற்காலிகமாக ஒரு விருப்பத் தேர்வாக இருந்தாலும், வேலைக்கு வெளியேயும் ஏற்படும் விபத்துகளிலிருந்து தங்களையும், தங்களின் குடும்பத்தாரையும் நிதிச் சுமையிலிருந்து பாதுகாக்க தொழிலாளர்கள் உடனடியாக இதில் இணையுமாறு பெர்கேசோ வலியுறுத்தியுள்ளது.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்