கோலாலம்பூர், ஆகஸ்ட்.08-
கடந்த மாதம் சீன நாட்டுப் பெண்மணியிடம் 21 லட்சம் ரிங்கிட் பணத்தைக் கொள்ளையடித்ததாக இரு விற்பனைப் பணியாளர்கள் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
30 வயது முகமட் ஷாகீர் முகமட் அமி மற்றும் 34 வயது நூர் முகமட் மாஹ்சார் முகமட் நோர் ஆகிய இருவரும் நீதிபதி சித்தி ஷாகீரா மோத்தாருடி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
31 வயது சீனப் நாட்டுப் பெண்மணியை ஒரு கும்பலாக மடக்கி, அந்த வெளிநாட்டு மாதுவிடமிருந்து பெரும் தொகையைக் கொள்ளையடித்ததாக அந்த இரு நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜுலை 21 ஆம் தேதி இரவு 10 மணியளவில் கோலாலம்பூர், புக்கிட் டாமன்சாரா, வில்லா ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் அந்த இருவரும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








